திருகோணமலை மாவட்டத்தில் இருந்து சுமார் 40அடி தூரத்தில் அமைந்துள்ள கிராமம் கந்தளாய். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், அபிவிருத்தி என்னும் இலக்கையும்இ பசுமை புரட்சியினையும் அடிப்படையாக கொண்டு இலங்கை எங்கும் குடியேற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இக் குடியேற்ற திட்டத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்தவர் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கா அவர்கள். அந்த வகையில் கந்தளாய் குளத்தை அடிப்படையாக கொண்டு மூவின மக்களை உள்ளடக்கி இப்பிரதேசத்தில் சுமார் 150 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இக்குடியேற்றமானது பல நோக்கங்களை அடையத்தக்க திட்டமாக அமைந்தது. உணவு உற்பத்திஇ நன்னீர் மீன் வளர்ப்புஇ சீனி உற்பத்தி உப உணவுஇ பயிர்இ வேலை வாய்ப்ப போன்றன உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் இக்குடியோற்றத்திட்டத்தில் 2 ஏக்கர் மேட்டுக்காணியும் 3 ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 1ம்இ2ம்ஆண்டுகளில் பல தமிழ் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களுக்கு கல்வி கற்க பாடசாலையொன்றை அமைக்க காணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் குடியேற்ற வாசிகளின் பிள்ளைகள் கோயில் கிராமத்தில் 1949ம் ஆண்டு அமைக்கப்பட்ட தி/விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இதனைத்தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட தி/பேராற்றுவெளி முஸ்லிம் வித்தியாலயத்திலும் தமது கல்வியை தொடர்ந்தனர். இச் செயற்பாடு பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமானதாக அமைந்தது. இதனை கண்ணுற்ற ஊர் பெரியார்கள் பேராறு கிராமத்திலே ஓர் பாடசாலை அமைக்க ணே;டும் என முடிவு செய்த போது அதற்காக கிராம முன்னேற்ற சங்கங்களின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. பாடசாலைக்கென அரச காணி ஒதுக்கப்படாத நிலையில் இறுதி நிலையாக கந்தளாய் சோழீஸ்வரர் ஆலயத்திற்கென அரசினால் ஒதுக்கப்பட்ட 4 ஏக்கர் காணியில் 2 ஏக்கர் காணியை பாடசாலை அமைப்பதற்காக ஒதுக்குவதற்கென தீர்மானிக்கப்படது. அன்றைய காலத்தில் கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவரான திரு.சி.வைரமுத்து (சஸ்திரியார்) அவர்களுடன் திரு.ர.வடிவேல் (கங்காணி)இதிருவாளர் செல்வராஜாஇ திருவாளர் கதிர்காமத்தம்பி ஆகியோருடன் கிராம மக்களும் முன்னின்று உழைத்ததன் விளைவாக தி/பேராறு அரசினர் தமிழ் கலவன் என்ற நாமத்துடன் ஓலைக் கொட்டைகைகளில் 1961ம் ஆண்டு எமது பாடசாலை உதயமாகியது இதற்கு தலைமை ஆசிரியராக தொண்டர் அடிப்படையில் திருவாளர்; சிவப்பிரகாசம் என்பவர் 27.09.1961 தொடக்கம் 30.04.1963 வரை தலைமை ஆசிரியராக கடமை புரிந்தார். இதனைத் தொடர்ந்து அரசினால் 1963ம் ஆண்டு அரச பாடசாலையாக கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக கையேற்கப்பட்டது பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 29ம் திகதியினையும் பாடசாலை அரச பாடசாலையாக கையேற்கப்பட்ட ஆண்டினையும் உரித்துடைய ஆண்டாக பிரகடனப்படுத்தி பாடசாலை ஆரம்ப நாள் நினைவுகூறப்படுகின்றது. அரச பாடசாலையாக கையேற்கப்பட்டபோது திருவாளர் சின்னத்தம்பி அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார் இக்கால கட்டத்தில் பாடசாலைக்கு இரண்டு நிரந்தரக் கட்டடங்களும் அரசினால் வழங்கப்பட்டு பாடசாலை விருத்தியடையத் தொடங்கியது. இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்பட்ட அமைதியின்மை நிலைமைகளினால் மக்கள் பல இடப்பெயர்வுகளையும்இ சொத்துஇ உயிரிழப்புகளையும் அடிக்கடி எதிர்கொண்டனர் எனினும் திருவாளர் சின்னத்தம்பி அவர்களை தொடர்ந்து அதிபராக கடமையாற்றிய திரு.சபாபதிப் பிள்ளைஇ கணேசலிங்கம் அவர்களுடைய காலத்தில் பல பௌதீக வளங்களையும்இ ஆளணி வளங்களையும் பெருமளவில் பெற்று இப்பாடசாலை கல்வி செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாவட்ட மட்டத்தில் குறிப்பிடத்தக்க பாடசாலையாக வளர்ச்சியடைந்தது.
பாடசாலை நாமம் சூட்டப்பட்ட வரலாறு
பெரிய ஆறு எமது கிராமத்த்தை ஊடுறுவிப் பாய்வதால் பேராறு என்றும் பதினோறாம் நூற்றாண்டில் சோழ வேந்தரால் நிர்மானிக்கப்பட்ட பழம்பெரும் தொன்மையும் கொண்ட சிவாலயத்தை அருகே கொண்டதனால் சிவனின் பெரும் புகழ் பூத்த நாமங்களில் ஒன்றாகிய பரமேஸ்வரா என்ற நாமத்தை பெற்று ''பேராறு பரமேஸ்வரா வித்தியாலயம்'' என்ற பெயருடன் இயங்கி வந்தது. இதனைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இப்பிரதேச மாணவர்கள் 13 பேர் தோற்றி 13 மாணவர்களும் சிறப்பான சித்திகளைப் பெற்று கா.பொ.த உயர்தரம் கற்பதற்று தெரிவு செய்யப்பட்டமை எமது பாடசாலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இதன் பிரதிபலனாக கல்வி அமைச்சினால் இப்பாடசாலை 25.05.1977ம் ஆண்டு மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது. இவ்வாறு கல்விகற்க சென்றவர்களில் பலர் பல்கழைக்கழகங்களுக்கு சென்று இன்று சமூகத்தில் உயர் ஸ்தானங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலத்திற்குக் காலம தொடர்ந்து உயர் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டமை இப்பாடசாலை வளர்ச்சியில் ஒரு அளவு கோலாக அமைகின்றது ஈரம்ப காலம் தொட்டு இப்பாடசாலை தோட்டச் செய்கைக்கு பெயர்போன பாடசாலையாக அமைந்தது. குல்வி அமைச்சினால் நடாத்தப்படும் விவசாயப் போட்டிகளிலும் பங்கேற்று மாவட்ட வலய மட்டங்களில் முதலாம்இ இரண்டாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது. இத் தோட்ட வருவாய் மூலம் திரு. தங்கராசா அவர்களின் ¼ ஏக்கரும் திரு. முத்துராசா அவர்களின் காணியில் ¼ ஏக்கரும் கொள்வனவு செய்யப்பட்டது. ஆதிபர் ஆசிரியர்இ மாணவர் எவ்வளவு தூரம் தமது சேவையை அர்பணித்தார்கள் என்று கூறினால் மிகையாகாது. இதனைத் தொடர்ந்து இப்பாடசாலை கல்விச் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் காட்டிய சாதனை வெளிப்பாட்டினால் 18.11.1985 அன்று 1உ பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதுடன் க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சிறப்புற அமைந்தமையால் திரு.ச.கணேசலிங்கம் அவர்களின் அயராத செயற்பாடுகளின் அங்கீகாரமாக 1990ம் ஆண்டு மாதிரிப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் இரண்டு மாடிக்ககட்டடங்களும் (11625 இ9025) பல கற்றல் உபகரணங்கள்இ மேற்கத்தேய வாத்திய இசைக்கருவி தொகுதிகள் இ ஒன்றுகூடல் மண்டபக்கதிரைகள் என பல பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட்டமை வரலாற்றில் ஓரகுறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.